கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸின் மனைவிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸின் மனைவி அம்ருதா தனது ட்விட்டர் பக்கத்தில் கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் அம்ருதாவை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்.
தீபாவளி உள்ளிட்ட இந்துக்களின் பண்டிகைகளில் கலந்து கொள்ளாத அம்ருதா, கிறிஸ்துமஸ் பண்டிகையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். மனைவி அம்ருதாவுடன் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸையும் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.
முன்னதாக தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடைக்கு ஆதராக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அப்போது அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே அவர் தனது பதிவை எடுத்துவிட்டார்.