திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பரப்புரையில் பேசும்போது மோடி ஆட்சியில் ஜனநாயத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, திரிணாமுல் கட்சியில் இணைந்தார். அனைத்தொடர்ந்து கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் பேசினார் அப்போது...
நந்திகிராமில் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலே நான் அக்கட்சியில் இணைந்து அவரை ஆதரிப்பதற்கு சரியான தருணம் என்று கூறியவர். கடந்த 1999 ஆம் ஆண்டு இந்திய விமானம், காந்தகருக்கு கடத்தப்பட்ட போது, பயணிகளை விடுவிப்பதற்காக பிணைய கைதியாக பயங்கரவாதிகளிடம் செல்வதற்கு மம்மா முன்வந்ததாகவும் யஷ்வந்த் சின்ஹா பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவில் நீதித்துறை உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் பலவீனமாகிவிட்டன. ஜனநாயகத்தின் வலிமை ஜனநாயக அமைப்புகளில்தான் உள்ளது. நாடு, முன் எப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.
வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் பாரதிய ஜனதா ஒருமித்த கருத்தை நம்பியது. ஆனால் தற்போதைய பாரதிய ஜனதா அரசு மாற்றுக்கருத்தை நசுக்குவதையும் வெல்வதையும் நம்புகிறது. மம்தா மீதான தாக்குதல் குறித்து பேசிய அவர், தற்போதைய பாஜக அரசு வெற்றி பெற எது வேண்டுமானாலும் செய்யும். மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான ஆட்சியில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் சின்ஹா கூறினார்.