டிரெண்டிங்
சசிகலா விவகாரத்தில் உரிய விசாரணை தேவை: டி.ராஜா வலியுறுத்தல்
சசிகலா விவகாரத்தில் உரிய விசாரணை தேவை: டி.ராஜா வலியுறுத்தல்
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக கூறும் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசு துணை தலைவராக நிறுத்தப்பட்டுள்ள கோபால கிருஷ்ண காந்தியை, நாட்டின் எதிர்காலம் கருதி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கை வெளியான பின், யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.