நீட்டைப் போல் இடஓதுக்கீடு வழக்கிலும் தமிழக அரசு கோட்டை விடக்கூடாது என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவிகித இடஒதுக்கீடு முறையை எதிர்த்து தமிழக மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் விரைவில் நடத்தவுள்ளது. இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள வீரமணி, நீட்டை கோட்டை விட்டது போல் இல்லாமல் இடஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டுமென விமர்சித்துள்ளார். எனவே வழக்கு விசாரணையின் போது, இடஒதுக்கீடு செல்லும் என்ற முந்தைய தீர்ப்பின் ஆதாரங்ளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனை மாணவர் சேர்க்கையை நிறுத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருப்பதையும் சுட்டிக்காட்டிய வீரமணி, நீட் தேர்வை நிரந்தரமாக நீக்குவதே பரிகாரமாக அமையும் என்று கூறியுள்ளார்.