“ஒரு வீட்டுக்கு 10 லட்சம் இழப்பீடு கொடுங்கள்” - கருணாஸ் கோரிக்கை

“ஒரு வீட்டுக்கு 10 லட்சம் இழப்பீடு கொடுங்கள்” - கருணாஸ் கோரிக்கை
“ஒரு வீட்டுக்கு 10 லட்சம் இழப்பீடு கொடுங்கள்” - கருணாஸ் கோரிக்கை
Published on

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டிய பணிகளில் இருந்து அரசு தவறிவிட்டது என்று கருணாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கஜா புயலின் தாக்கத்தால் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளது பெரும் வேதனையளிக்கிறது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் அடைந்த துயரம் வரலாறு காணாத சோகம்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டிய பணிகளில் அரசு தவறிவிட்டது. இன்னும் பல ஊர்கள் புயல் அடித்த நிலமையிலிருந்து மீளவே இல்லை. தமிழக அரசின் நிவாரணப் பணிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்குக் இருப்பதாக தெரியவில்லை. 

'கஜா' புயல் தாக்கி 4 நாட்கள் ஆகும் நிலையில் பாதிக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர், உணவு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் போதிய அளவு அக்கறை காட்டாததால் பல இடங்களில் மக்கள் போராடுகின்றனர். இந்த நிலைக்கு மக்கள் சென்றதற்கு தமிழக அரசு வெட்கப்படவேண்டும்.

'கஜா' புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினரும், அப்பணிகளை மேற்பார்வையிட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் ஊரகப் பகுதிகளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பதுதான் மக்கள் சொல்லும் மிகப்பெரிய குற்றச்சாட்டு. சாலைகள் போக்குவரத்து  சீரமைக்கும் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியான தேவைகளை அரசு செய்ய முன் வரவேண்டும். எல்லாம் சரி செய்வதுபோல பாசாங்கு செய்யக்கூடாது. 
 
தஞ்சை டெல்டா கடற்கரையோர மாவட்ட மக்களுக்கு ஒரு வீட்டுக்கு 10 இலட்சமும், தஞ்சை உட்புற ஊரகப் பகுதிகளில் உள்ளோருக்கு ஒரு வீட்டுக்கு தலா 5 இலட்சமும் தமிழக அரசு வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.

இப்புயலால் ஒவ்வொரு வீட்டிலும் தென்னை மரங்கள் உள்ளிட்ட மரங்கள், ஆடு கோழிகள் என பல இழப்பீடுகளை மக்கள் சந்தித்துள்ளனர். அந்தப் பெரும் இழப்பீட்டை மக்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைவதே அவர்களுக்கு அரசு செய்யும் முதன்மை கடமையாகும்” இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com