14 ஆவது ஐபிஎல் சீசனில் தன்னுடைய 2 ஆவது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த் பஞ்சாப் அணியை இன்றையப் போட்டியில் எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
முதல் லீக் போட்டியில் டெல்லி அணியுடன் தோல்வியடைந்த நிலையில் இன்றையப் போட்டியில் பஞ்சாபை சென்னை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுதியாய் இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னையின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது.
ஆனால் பேட்டிங்கை பொறுத்தவரை சுரேஷ் ரெய்னா அரைசதமடித்தார். ஆனால் கேப்டன் தோனி ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றினார். இந்தப் போட்டியில் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளிசிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை தர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர். அது தவரி ராயுடு, மொயின் அலி ஆகியோரும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும்.
பஞ்சாப் அணி தன்னுடைய முதல் போட்டியில் ராஜஸ்தானை 4 ரன்களில் வென்றது. அந்த அணியில் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, கிறிஸ் கெயில் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14 இல் சென்னையும், 8 இல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. கடந்த சீசனில் இரு லீக்கிலும் பஞ்சாப்பை சென்னை அணி தோற்கடித்தது அந்த அணிக்கு சாதகம்.
சிஎஸ்கே உத்தேச அணி
டூ பிளிஸ்சிஸ்
ருதுராஜ் கெய்க்வாட்
சுரேஷ் ரெய்னா
அம்பத்தி ராயுடு
மொயீன் அலி
தோனி
ரவீந்திர ஜடேஜா
சாம் கர்ரன்
பிராவோ
தீபக் சாஹர்
ஷர்துல் தாகூர்
பஞ்சாப் உத்தேச அணி
கே.எல். ராகுல்
மயங்க் அகர்வால்
கிறிஸ் கெய்ல்
நிகோலஸ் பூரன்
தீபக் ஹூடா
ஷாருக்கான்
முருகன் அஸ்வின்
முகமது ஷமி
ஜய் ரிச்சர்ட்சன்
ரிலி மெரிடித்
அர்ஷ்தீப் சிங்.