தமிழக தேர்தல்: வேட்பாளர்களின் குற்ற வழக்கு விவரங்கள்; தேர்தல் ஆணையம் அறிக்கை

தமிழக தேர்தல்: வேட்பாளர்களின் குற்ற வழக்கு விவரங்கள்; தேர்தல் ஆணையம் அறிக்கை
தமிழக தேர்தல்: வேட்பாளர்களின் குற்ற வழக்கு விவரங்கள்; தேர்தல் ஆணையம் அறிக்கை
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 138 திமுகவினர் மீதும், 46 அதிமுகவினர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ், வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டார். தேர்தலில் போட்டியிடும் 3,998 வேட்பாளர்களில் 3,559 வேட்பாளர்களின் விவரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. போட்டியிடும் 3,559 வேட்பாளர்களில் 466 பேர், தங்கள் மீது குற்ற வழக்கு உள்ளதாக அறிவித்துள்ளனர். 207 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கடுமையான குற்றப்பிரிவுகளில் வழக்குகள் உள்ளன என்று அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையின் படி, “ கட்சி வாரியாக குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர் விவரங்களில் திமுகவில் 178 பேரில் 136 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அதிமுகவில் 191 வேட்பாளர்களில் 46 பேர் மீதும், பாஜகவில் 20 வேட்பாளர்களில் 15 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில் 21 வேட்பாளர்களில் 15 பேர் மீதும், தேமுதிகவில் 60 வேட்பாளர்களில் 18 பேர் மீதும், பாமகவில் 10 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன.

பொருளாதார பின்னணி குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் 3,559 வேட்பாளர்களில், 652 பேர் கோடீஸ்வரர்கள். அதில் அதிமுகவில் 164 வேட்பாளர்களும், திமுகவில் 155 வேட்பாளர்களும், காங்கிரஸில் 19 வேட்பாளர்களும், பாஜகவில் 15 வேட்பாளர்களும், தேமுதிகவில் 19 பேருக்கும், பாமகவில் 14 பேருக்கும் ஒரு கோடிக்கு மேல் சொத்து உள்ளது.

வேட்பாளர்களின் கல்வி விவரங்களை ஆய்வு மேற்கொண்டதில், 1731 வேட்பாளர்கள் 5ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படித்துள்ளனர். 1443 பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி கொண்டவர்கள். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் 106 பேர். 3,559 வேட்பாளர்களில் 11 சதவிகிதம் பேர் அதாவது 380 பேர் மட்டுமே பெண்கள்”என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com