காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கட்சி தேசிய அளவில் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் சில கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்றும் ஆனால் அதில் மார்க்சிஸ்ட் இடம்பெறாது என்றும் காரத் தெரிவித்தார். மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுவது போன்று தாராள பொருளாதார கொள்கைக்கு எதிராக போராட வேண்டும் என்பதும் தங்கள் கட்சியின் கொள்கை என காரத் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி தாராள பொருளாதார கொள்கைக்கு ஆதரவாக உள்ளதால் அவர்களுடன் கூட்டு சேர மாட்டோம் என காரத் விளக்கினார். இந்நிலையில் ஆர்கே நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் ஆதரவளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.