பூமிக்கு மேலே 1 லட்சம் அடி உயரம்; விண்வெளியில் திருமணம் செய்ய ஆசையா? இவ்வளவு பணமிருந்தால் சாத்தியம்!

விண்வெளியில் திருமணம் செய்துகொள்ள நபர் ஒருவருக்கு ரூ.1 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
விண்வெளி திருமணம்
விண்வெளி திருமணம்twitter page
Published on

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழமொழி. ஆனால், இன்று வலைத்தளங்களுக்குள்ளேயே அடங்கி விடுகின்றன என்பதுதான் நிதர்சனம். அது மட்டுமின்றி ஒருசில பணக்காரர்கள் தங்களுடைய பணபலத்தைக் காட்டும் வகையில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைப்பதும் அரங்கேறி வருகிறது. மலையில், விமானத்தில், கடலில் என வித்தியாசமான சூழல் கொண்ட இடங்களில் திருமணம் செய்வதும் இயல்பாகி விட்டது. அந்த வகையில், யாரும் இதுவரை செய்திடாத அளவுக்கு, விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வசதியை தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ளது. அதற்காக, விண்வெளியில் திருமணம் செய்துகொள்ள நபர் ஒருவருக்கு ரூ.1 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் (Space Perspective) என்று அழைக்கப்படும் புதிய நிறுவனம் திருணம் செய்துகொள்ள விரும்பும் ஜோடிகளை கார்பன் நியூட்ரல் பலூன் ஒன்றில் விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த ராட்சத பலூனில் ஏராளமான ஜன்னல்கள் உள்ளன. பூமியில் இருந்து கிளம்பும் ஜோடி, சரியாக 1 லட்சம் அடி உயரத்திற்குச் சென்றதும், விண்வெளியில் இருந்தபடி பூமியின் அழகை கண்டுகளித்துக் கொண்டே திருமணம் செய்துகொள்ளலாம். திருமணம் முடிந்ததும் திருமண தம்பதிகளாக அவர்கள் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படுவர். இந்த முறையில் விண்வெளியில் திருமணம் செய்துகொள்ள ஏற்கெனவே 1,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற திருமண சேவையை, 2024 முதல் தொடங்கி வைக்க ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com