பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் சிகிச்சை பெற வழியின்றி டெங்குவால் உயிரிழப்பது வேதனை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்கள் டெங்குவால் சிகிச்சை பெற வழியின்றி உயிரிழப்பதை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் சுகாதாரத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால், தனியார் மருத்துவமனைகளில் பொருளாதார ரீதியாக சுகாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.