கொரோனா கால மகத்துவர்: ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய இங்கிலாந்து வாழ் இந்தியர்கள்

கொரோனா கால மகத்துவர்: ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய இங்கிலாந்து வாழ் இந்தியர்கள்
கொரோனா கால மகத்துவர்: ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய இங்கிலாந்து வாழ் இந்தியர்கள்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் நன்கொடையாக வழங்கினர்.

கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவிவருவதை அடுத்து, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக, இங்கிலாந்து வாழ் இந்தியர்களின் யுவர் ஒன் விஷ் என்ற அமைப்பின் மூலம் இந்தியாவில் அதிக நோய்த் தொற்று உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு, ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 2 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை திருக்கோவிலூரில் உள்ள மோபோ அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் கிளப் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட லயன்ஸ் கிளப் மற்றும் மோபோ அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com