கொரோனா கால மகத்துவர்: நிவாரண பொருட்கள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய சிறுவன்

கொரோனா கால மகத்துவர்: நிவாரண பொருட்கள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய சிறுவன்
கொரோனா கால மகத்துவர்: நிவாரண பொருட்கள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய சிறுவன்
Published on

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு சிறுவன் ஒருவன் தமது பிறந்த நாளில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பில்லைக்காரர் தெருவைச் சேர்ந்த யுவராஜ் என்பவரது மகன் பரத். இந்த சிறுவனுக்கு இன்று 13-வது பிறந்த நாள். இந்த பிறந்த தினத்தை எப்போதும்போல கேக் வெட்டி  வீட்டில் கொண்டாடாமல் தன் தந்தையிடம் இந்த கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் ஏழை எளியோருக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் ஏதாவது செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதன்படி 5 கிலோ அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை டோக்கன் மூலம் விநியோகிக்க திட்டமிட்டு பிறந்த தினமான இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி, சிறுவன் தன் பிறந்த நாளை கொண்டாடியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இது போன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com