ஒரேநாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒலிம்பிக்கில் அதிகரிக்கும் தொற்றுகள்

ஒரேநாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒலிம்பிக்கில் அதிகரிக்கும் தொற்றுகள்
ஒரேநாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒலிம்பிக்கில் அதிகரிக்கும் தொற்றுகள்
Published on

ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நாளை தொடங்க உள்ள நிலையில் அதில் கலந்து கொள்ள உள்ள 8 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சுடுதலில் ஸ்கீட் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான பிரிட்டனின் ஆம்பர் ஹில் கொரோனா தொற்று காரணமாக பங்கேற்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர சிலி நாட்டு டேக்வாண்டோ வீரர், நெதர்லாந்து அலைச்சறுக்கு போட்டி வீரர், செக் நாட்டு டேபிள்டென்னிஸ் வீரர் என 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் அவர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தவிர மேலும் சில வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் கொரோனா அறிகுறிகளுடன் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஒலிம்பிக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே டோக்யோவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் ஆயிரத்து 832 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com