ராகுல் காந்தியுடன் திருமணமா? : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிதி சிங்

ராகுல் காந்தியுடன் திருமணமா? : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிதி சிங்
ராகுல் காந்தியுடன் திருமணமா? : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிதி சிங்
Published on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திருமணம் நடைபெறப்போவதாக பரவிய வதந்தி வருத்தமளிப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராபரேலி தொகுதி எம்எல்ஏ அதிதி சிங். இவருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் திருமணம் நடைபெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அதிதி சிங், ராகுல் காந்தி அருகே நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இத்தகவல் பரப்பப்பட்டு வந்தது. அதிதி சிங், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகிலேஷ் சிங்கின் மகள். இந்நிலையில் திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு அதிதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘சில வதந்திகள் என்னை பாதித்துள்ளது. ராகுல் காந்தி எனது சகோதரர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகள் என்னை மிகவும் வருத்தம் அடையச்செய்துள்ளன’ எனக் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com