“வாரிசு அரசியல் அமெரிக்காவிலும் இருக்கிறது” - சோனியா சமாதானம்

“வாரிசு அரசியல் அமெரிக்காவிலும் இருக்கிறது” - சோனியா சமாதானம்
“வாரிசு அரசியல் அமெரிக்காவிலும் இருக்கிறது” - சோனியா சமாதானம்
Published on

தன் குடும்பத்தை சாராதவர்கள் தலைவராக எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவார் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் குடும்ப அரசியல் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. ராகுல் காந்தி தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட போதும் இதே விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் குடும்ப வாரிசு அரசியல் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சோனியா காந்தி நிதானமாக பதிலளித்தார்.

  • நேரு குடும்பத்தினர் அல்லாது உங்கள் கட்சிக்கு வேறு நபர்கள் தலைவர்களாக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

 “ஏன் இல்லை? எதிர்காலத்தில் வராலாம்”

  • நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தலைவராக இல்லாமல் காங்கிரஸ் கட்சி செயல்படாதா?

“அதனை காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம்தான் கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. கட்சியின் தலைவர் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள். குடும்ப வாரிசு அரசியல் அமெரிக்காவிலும் இருக்கிறது. புஷ் மற்றும் கிளிண்டன் குடும்பத்தினர் அரசியலில் இருக்கிறார்கள். அதேபோல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குடும்ப வாரிசு அரசியல் இருக்கிறது.”

  • நீங்கள் ஏன் பிரதமர் ஆகவில்லை?

“பிரதமர் பதவிக்கு என்னைவிட மன்மோகன் சிங் தகுதியானவர் என்பதால்தான் அவரை 2014 இல் தேர்வு செய்தேன்.”

  • காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு மையமாக நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்களா?

(சிரித்துக்கொண்டே) “இது மிகவும் கடினமான கேள்வி. நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இதனை கேட்கலாம்.” 

  • காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பேற்றது குறித்து?

“ சிலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்தார்கள். கட்சிக்கு உதவி செய்ய முடிந்திருந்தும் எந்த முயற்சியும் மேற்கொள்ள முடியாமல் நான் ஒரு கோழையைப் போல் இருந்ததற்காக வருந்தினேன். காங்கிரஸ் கட்சி மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதை கண்டு வருந்திய போது அரசியல் வீழ்ச்சியிலிருந்து அதை மீட்க நான் முடிவு செய்தேன்.”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com