அரசு அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி மிரட்டிய காங்கிரஸ் தலைவர்!

அரசு அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி மிரட்டிய காங்கிரஸ் தலைவர்!
அரசு அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி மிரட்டிய காங்கிரஸ் தலைவர்!
Published on

பெங்களூரில் காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, அரசு அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி மிரட்டும் காட்சி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சில மாதங்களில் சட்டப் பேரவை பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள மாநகராட்சி அலுவலம் ஒன்றில், அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான நாராயணசாமி பெட்ரோல் ஊற்றி மிரட்டும் காட்சி வெளியாகியுள்ளது. அதில், வருவாய்த்துறை அலுவலரின் அறைக்குள் நுழைந்து மிரட்டும் நாராயணசாமி, கையில் உள்ள பாட்டிலில் இருக்கும் பெட்ரோலை வீசி அடிக்கிறார். இதனால் அங்குள்ள அரசு அதிகாரிகள் மிரளுகின்றனர். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரி செங்கல் ராயப்பா அளித்துள்ள புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக, அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வேண்டப்பட்டவர் எனக் கூறப்படும் சட்ட வல்லுநர் பைராதி பசவராஜின் மகன் முகமது ஹாரிஸ், ஓட்டலில் காயம்பட்டிருந்த ஒருவரை அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. முகமது ஹாரிஸ் அவரது நண்பர்களுடன் பெங்களூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது காலில் காயம் ஏற்பட்டிருந்த ஒருவர், தனது காலை டேபிள் மீது வைத்துள்ளார். இதைக் கண்ட முகமது காலை தரையில் வைத்து உட்காருமாறு கூற, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முகமதுவும், அவரது நண்பர்களும் தாக்கியதில், காலில் காயம் பட்டிருந்த நபர் மேலும் பலத்த காயமடைந்தார். அவரது கண்கள் வீங்கி, சட்டை முழுவதும் ரத்தக்கரையானது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முகமது மீது தீவிர நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் கடந்த மாதம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி அரசு அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றி மிரட்டுவது, சர்ச்சையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com