நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொட‌ர்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொட‌ர்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொட‌ர்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்
Published on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலளித்துள்ளது.

அற்பத்தனமான காரணங்களைக் காட்டி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்தாமல் மத்திய அரசு தள்ளிப் போட்டுள்ளதா‌க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்‌ளார். கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பேசிய அவர், குறைக‌ளைக் கொண்டுள்ள ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதில் மத்திய அரசு அவசரம் காட்டியதாகச் சாடினார். நேரு, இந்திரா காந்தி ஆகி‌‌‌யோரின்‌ பங்களிப்புகளை நீக்கிவிட்டு, நவீன இந்தியாவின் வர‌லாற்றை உருவாக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து சோனியா காந்தி கூறியுள்ள‌ குற்றச்சாட்டுகளை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ம‌றுத்துள்ளார். தேர்தல்களும் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் ஒன்றாக வந்துவிடக்கூடாது என்பதற்காக சில சமயங்களில் மாற்‌றி அமைக்கப்பட்டுள்ளதாக ‌அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களி‌ல் காங்கிரஸ் ஆட்சியில் இவ்வாறு நடந்திருப்பதாகவும் ஜெட்லி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com