தனித் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய அடம்பிடித்த பொதுவேட்பாளர்

தனித் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய அடம்பிடித்த பொதுவேட்பாளர்
தனித் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய அடம்பிடித்த பொதுவேட்பாளர்
Published on

சமூக சேவையில் இருக்கும் நபர் ஒருவர் தனித் தொகுதி எது..? பொதுத் தொகுதி எது எனத் தெரியாமல் வேட்புமனுத் தாக்கல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பூந்தமல்லி (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று திருநின்றவூரை சேர்ந்த ராமன் (50) என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார். அவரது மனுவை அதிகாரிகள் சோதனை செய்தபோது சாதி சான்றிதழில் பொது பிரிவை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் ‘இது தனித் தொகுதி இதில் நீங்கள் போட்டியிட முடியாது’ என்று தெரிவித்தனர். அதற்கு அவர் நான் முதன்முறையாக போட்டியிடுகிறேன். இதுவரை ஏராளமான சமூக சேவைகள் செய்து வருகிறேன். பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்துள்ளேன். டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் கையோடு கொண்டு வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எவ்வளவு கூறியும் அதனைக் கேட்காத ராமன், பிடிவாதமாக நான் வேட்பு மனுத் தாக்கல் செய்தே தீருவேன் எனத் தெரிவித்து விட்டு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது, வேட்பு மனுவை வாபஸ் பெற்றால் டெபாசிட்டாக கட்டிய தொகை திரும்ப கிடைக்கும். வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் டெபாசிட் தொகை கிடைக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கும் அந்த நபர் நான் மனுவை வாபஸ் வாங்க மாட்டேன் என்று தெரிவித்தார். சமூக சேவையில் இருக்கும் நபர் தனித் தொகுதி எது? பொதுத் தொகுதி எது எனத் தெரியாமல் இருந்துக்கொண்டு வேட்பு மனுத் தாக்கல் செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com