ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம்: ஹெச்.ராஜா வரவேற்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம்: ஹெச்.ராஜா வரவேற்பு
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம்: ஹெச்.ராஜா வரவேற்பு
Published on

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ’அதிமுக தொண்டர்களிடையே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. அது நியாயமானதா நியாயமற்றதா என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இந்த நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் ஒரு செல்வாக்கு மிக்க முதலமைச்சராக இருந்தவரின் மரணம் குறித்து சந்தேகங்கள் இருப்பது சரியில்லை. அதனால் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இது அதிமுக இணைப்புக்கு இது வழி வகுக்கும். ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முன் வைத்த இரு கோரிக்கைகளில் ஒன்று தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பது. மற்றொன்று ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்பது. மஃபா.பாண்டியராஜன் கூட இதை தர்மத்திற்கான வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.

ஆகவே இணைப்பிற்கு இது வழி வகுக்கும் என்பது எனது கணிப்பு. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது ஓ.பி.எஸ் அணியினரின் கோரிக்கை. எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றிருக்கிறார். ஆகவே இரு அணிகளும் இணைய வேண்டும் என விரும்புகிறார்கள். இதில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

1989 ஜெ அணி, ஜானகி அணி எனப் பிரிந்து அதனால் திமுக ஆட்சிக்கு வந்ததை அதிமுகவின் இரண்டு அணித் தலைவர்களும் மறந்திருக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எண்ணியபடி திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்கிற நோக்கத்தோடு இருவரும் அணிகள் இணைப்புக்கு முன் வந்திருக்கலாம்’’ என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com