பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி, இத் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஆண்டுதோறும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. நடப்பு ஆண்டில் சுமார் 485 கோடி ரூபாய் செலவில் 1 கோடியே 56 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன.
மேலும் தமிழகம் முழுவதும் நாளை முதல் நியாய விலைக் கடைகளில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி,சேலைகள் வழங்குவதற்கான ஆயத்த பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.