சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தவேண்டும் - சென்னை மாநகராட்சி

சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தவேண்டும் - சென்னை மாநகராட்சி
சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தவேண்டும் - சென்னை மாநகராட்சி
Published on

சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தவேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகள் தற்போது கொடுக்கப்பட்டாலும் தொடக்கத்தில் தளர்வுகள் ஏதும் இன்றி ஊரடங்கு அமலானது. இந்த ஊரடங்கால் பலரும் வருமானமின்றி பாதிக்கப்பட்டனர்.

அனைத்து தரப்பினரையும் வருமான ரீதியாக பாதிக்க வைத்துள்ளது கொரோனா. இதனைக் கருத்தில் கொண்டு சொத்து வரி கட்ட அரசு அவகாசம் அளித்தது. அதாவது 2020-21 ஆண்டிற்கான சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதமே கட்டப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தவேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகள், மாநகராட்சி ஊழியர்களின் சம்பளம் என மாநகராட்சி தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், வரி வசூல் செய்தால் தான் நெருக்கடியை சமாளிக்க முடியும் எனவும் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com