கூட்டணி அமைப்பதில் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியிலிருந்து, தேமுதிக விலகியதற்கு அக்கட்சியின் பக்குவமற்ற தன்மையே காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா “கூட்டணி அமைப்பதில் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை” எனத் தெரிவித்தார்