இனி வாய்ப்பே இல்லை - வெளியேறும் சிஎஸ்கே..!

இனி வாய்ப்பே இல்லை - வெளியேறும் சிஎஸ்கே..!
இனி வாய்ப்பே இல்லை - வெளியேறும் சிஎஸ்கே..!
Published on

அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் 12 ஆட்டங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த மோசமான பர்பாமென்ஸினால் பிளே ஆஃப் சுற்றில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்ட நிலையில் நேற்றைய மும்பை-ராஜஸ்தான் போட்டி  சென்னையை நிரந்தரமாக வெளியேற்றியது. மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்கத்தில் மெதுவாக சென்றுகொண்டிருந்த மும்பை அணி ஹர்திக் பாண்ட்யா வந்த பின்பு வேகம் எடுத்தது. இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக், 21 பந்துகளில் 60 ரன்களை எடுத்தார். அதில் 7 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்தது. பெரிய இலக்கை ராஜஸ்தான் கடந்து வெற்றி பெறுமா என நினைத்துக்கொண்டு இருக்கையில் பென் ஸ்டோக்ஸ்- சஞ்சு சாம்சன் ஜோடி அதை முடித்துக்காட்டியது.

18.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை கைப்பற்றியது. பென் ஸ்டோக்ஸ் 60 பந்துகளில் 107 ரன்களுடனும் சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த அபார வெற்றியால் சென்னை அணி நிரந்தரமாக வெளியேறியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி  அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறுவது இதுவே முதல் முறை. பதிமூன்று சீசனில் பன்னிரண்டு முறை சென்னை அடுத்த சுற்றிற்கு முன்னேறி உள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடங்களில் இருந்தது. தற்போது ராஜஸ்தான் அணியின் சூப்பர் வெற்றியும் சென்னை அணியை முதல் சுற்றோடு உறுதியாக வெளியேற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com