நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் அதீத கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள அவர், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவித்தார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 58 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக புவியரசன் கூறினார்.