மதுரை கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யக் கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக கோபாலகிருஷ்ணன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து அவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மதுரை மகாத்மா காந்தி நகர், எஸ்.ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் 'தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எவ்வித தொடர்பு இல்லாதவர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரையும் மதிக்கத் தெரியாதவர் கோபாலகிருஷ்ணன். ஆகவே தயவு செய்து வேட்பாளரை மாற்ற மறுபரிசீலனை செய்யுமாறு அதிமுக தலைமையை கேட்டுக்கொள்கிறோம் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக அம்மாவின் உண்மை தொண்டர்கள் மற்றும் விசுவாசிகள் எனும் பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதன்பிறகு சிறிது நேரத்திற்குள்ளாகவே இந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.