கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான 14 இடங்களில் இன்று (திங்கள்கிழமை) காலை அதிரடி சோதனையை மேற்கொண்டது சிபிஐ.
ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து டி.கே.சிவகுமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கும் பதியப்பட்டது.
இந்நிலையில் சிபிஐ ரெய்டுகளை கண்டு அஞ்சமாட்டோம் என ட்விட்டரில் கர்ஜித்துள்ளார் டி.கே.சிவகுமார்.
“பழிவாங்கும் அரசியல் நோக்கத்தோடு பாரதிய ஜனதா கட்சி இந்த சிபிஐ சோதனையை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆட்சியின் தோல்வியை சுட்டி காண்பிப்பதில் தொடங்கி கொரோனா சூழலை கையாண்டது வரை அனைத்து நேரத்திலும் காங்கிரஸ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளது.
அநீதிக்கு எதிராக போராடும் எங்களை இந்த சோதனைகளால் ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது.
உங்களது வியூகங்களை உடைத்தெறிந்து மக்கள் நீதிமன்றத்தில் நாங்கள் நிச்சயம் வென்று காட்டுவோம்” என ட்வீட் செய்துள்ளார் அவர்.