காவிரி பிரச்னையில் தலையிடுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி பிரச்னையில் தலையிடுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திற்கு தான் கடிதம் எழுதி உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் வாழித்தடங்களைத் தூய்மைப்படுத்துதல் ஆணையர் லியோ ஹெல்லரிடம், ஜெனீவாவில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் மூலம் தான் மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். அதில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இந்திய அரசு, கபட நாடகம் ஆடுவதாகவும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும் வைகோ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனவே தாங்கள் இந்தப் பிரச்னையில் இந்திய அரசை தொடர்பு கொண்டு, காவிரி பிரச்னையில் தமிழத்திற்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். இயன்ற நடவடிக்கை எடுப்பதாக லியோ ஹெல்லர் உறுதி அளித்திருப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்.