கடலில் மிதந்து வந்த கஞ்சா... காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

கடலில் மிதந்து வந்த கஞ்சா... காவல்துறையினரிடம் ஒப்படைப்பு
கடலில் மிதந்து வந்த கஞ்சா... காவல்துறையினரிடம் ஒப்படைப்பு
Published on

புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு புதுக்குடி மற்றும் வடக்கு புதுக்குடி அருகே கடலில் மிதந்து வந்த 56 கிலோ கஞ்சா மூட்டைகள் மீனவர்களால் மீட்கப்பட்டு கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


கடற்கரை பகுதியான புதுக்குடி கிராமத்திலிருந்து பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடற்கரையில் இருந்து ஒன்பது நாட்டிக்கள் தொலைவில் சணல் சாக்கு மூட்டை ஒன்று உப்பு படிவத்துடன் மிதந்து வருவதைக் கண்ட மீனவர்கள் அதனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் முத்துக்கண்ணு, சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது.


இந்நிலையில் வடக்கு புதுக்குடி கிராமத்திலிருந்து ஆரியசாமி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது சாக்கு மூட்டை ஒன்று மிதந்து வந்தது. அதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் தகவல் தெரிவித்த நிலையில் அங்கு சென்ற போலீசார் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது உள்ளே 14 கஞ்சா பண்டல்கள் இருந்ததுள்ளது.


இரண்டு பகுதிகளில் வெவ்வேறு மீனவர்கள் கடலில் மிதந்த கஞ்சா பொட்டலங்களின் மொத்த எடை 56 கிலோ என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் முத்துக்கண்ணு விசாரணை மேற்கொண்டு சிவகங்கை மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமலதாவிடம் மீட்கப்பட்ட கஞ்சா ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com