தமிழக அரசின் அரியர் ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE எழுதிய கடிதம் வெளியானது.
பொறியியல் மாணவர்களுக்கு அரியர்ஸ் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறிருந்தார்.
இதையடுத்து ஏஐசிடிஇ எழுதிய கடிதம் தமிழக அரசுக்கு வரவில்லை என்றும் அக்கடிதத்தை வெளியிட வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக அரசின் அரியர் ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ கடிதம் வெளியாகியுள்ளது.
இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றும் அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல், எம்.சி.ஏ. படிப்புகளுடன் பி.இ. அரியர்ஸ் மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்ததற்கு ஏஐசிடிஇ தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.
அரியர்ஸ் ரத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.