ஃபேஸ்புக் ஓனருக்கு சம்மன்..மல்லையா, நிரவ் மோடிக்கு முடியாதா..?

ஃபேஸ்புக் ஓனருக்கு சம்மன்..மல்லையா, நிரவ் மோடிக்கு முடியாதா..?
ஃபேஸ்புக் ஓனருக்கு சம்மன்..மல்லையா, நிரவ் மோடிக்கு முடியாதா..?
Published on

விஜய் மல்லையா, நிரவ் மோடிக்கு ஏன் சம்மன் அனுப்ப முடியவில்லை என பாரதிய ஜனதாவுக்கு ராஷ்டிர ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்டு ட்ரம்பை ஆதரிக்கும் வகையில், பிரிட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா பேஸ்புக் பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மார்க் ஸக்கர்பெர்க்கும் தவறு நடந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். 

இதனிடையே, 2019 மக்களவை தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக செயல்பட கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துள்ளதாக, பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் விரும்பத்தகாத வகையில் ஃபேஸ்புக் உள்ளிட்ட எந்தச் சமூக வலைத்தளம் ஈடுபட்டாலும் அரசு சகித்துக் கொள்ளாது என்று தெரிவித்தார். இதில் மார்க் ஸக்கர்பெர்க்கு எதிராக சம்மன் அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார். 

இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் பாஜக அரசு, மோசடி செய்து வெளிநாடு தப்பிச் சென்றவர்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுப்பதில்லை என்று பீகார் முன்னாள் முதலமைச்சரும், லாலு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ்  விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, “ ஃபேஸ்புக்கில் பாஜகவின் பாப்புலாரிட்டி குறைந்து விட்டது. அதனால் சம்மன் அனுப்பப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனருக்கு சவால் விடுக்கிறார்கள். உண்மையில் இந்த அரசுக்கு வலிமை இருந்தால், நிரவ் மோடிக்கும், விஜய் மல்லையாவுக்கும் ஏன் சம்மன் அனுப்ப முடியவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com