மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா? - கமல்ஹாசன் கேள்வி

மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா? - கமல்ஹாசன் கேள்வி

மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா? - கமல்ஹாசன் கேள்வி
Published on

மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் 586 கோடி. ஆனால், அதற்குரிய நியாயமான வளர்ச்சிப்பணிகள் நிகழவே இல்லை. குடிநீர்ப் பிரச்னை, பாதாள சாக்கடைப் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள். போர்க்களம் போலிருக்கிறது மதுரை.

மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா? பண்பாட்டுப் பெருமிதம் மிக்க நகரத்தைக் கழக ஆட்சிகள் கைவிட்டு விட்டன.

உள்ளாட்சித் தேர்தலில் வென்று மக்கள் பங்கேற்புடன் ‘ஏரியா சபைகள்’ அமைக்கப்பட்டு இந்தப் பிரச்னைகள் ஒவ்வொன்றாகத் தீர்க்கப்படும்" என தெரிவித்துள்ளார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com