“தகவலின் அடிப்படையிலேயே ஐடி ரெய்டு நடத்துகிறார்கள்” - பாஜகவின் சி.டி.ரவி விளக்கம்

“தகவலின் அடிப்படையிலேயே ஐடி ரெய்டு நடத்துகிறார்கள்” - பாஜகவின் சி.டி.ரவி விளக்கம்
“தகவலின் அடிப்படையிலேயே ஐடி ரெய்டு நடத்துகிறார்கள்” - பாஜகவின் சி.டி.ரவி விளக்கம்
Published on

வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடத்துகிறார்கள் என பாஜகவைச் சேர்ந்த சிடி ரவி கூறியுள்ளார். 

தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே பல்வேறு அரசியல் கட்சியினருக்கு சொந்தமான இடங்களிலும் வேட்பாளர்கள் வீட்டிலும் வருமானவரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்துவருகிறது. அதுகுறித்து பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டிவிட்டு ஐடி ரெய்டு செய்யவைக்கிறது அதிமுக. திமுகவை தேர்தல் களத்தில் வெல்லமுடியாது என்பதால் வருமானவரி சோதனை நடத்துகின்றனர். ஐடி ரெய்டு நடத்தினால் பயந்துபோய்விடுவார்கள் என மத்திய அரசு நினைக்கிறது எனக் கூறினார். 

அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக பொறுப்பாளரான சி.டி ரவி கூறுகையில், ’’வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடத்துகிறார்கள்; கருப்புப் பணம் வைத்துள்ளனவர்கள்தான் வருமானவரி சோதனைப்பற்றி கவலைப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com