வண்டிக் காளை ஒன்று உரிமையாளர் உதவி இல்லாமலே தனது பணியை மேற்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு உலகில் எந்த மூலையில் ஒரு நிகழ்வு நடந்தாலும் அது பொது பார்வைக்கு வந்துவிடுகின்றது. அப்படி ஒரு வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த வீடியோ, மனிதர்களுக்கு மாடு ஒன்று அறிவுரை தருவதைப் போல் அமைந்துள்ளது என்பதுதான். வண்டிக்காளை ஒன்று அதன் உரிமையாளர் இல்லாமலே தானாக வண்டியின் நுகத்தடியை தூக்கி கழுத்தில் மாட்டிக் கொண்டு பயணத்தை மேற்கொள்கிறது. அதுவும் மிக இயல்பாக தனது கழுத்தில் அது எடுத்து மாட்டிக் கொள்ளும் காட்சி மிகச் சிறப்பாக பதிவாகியுள்ளது.
இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனைக் கண்டு ரசித்துள்ளனர். இந்த வீடியோவை பர்வேஷ் சாஹிப் சிங் பகிர்ந்துள்ளார். இவர் மேற்கு டெல்லியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மொத்தம் 12 விநாடிகள் மட்டும் உள்ள இந்த வீடியோவை பதிவிட்டு ட்வீட் செய்த அவர், "மயக்க செய்கிறது" என்று தலைப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் உற்சாகமாக பரப்ப செய்தனர். இந்த வீடியோ பதவு 27,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளியுள்ளது. கிட்டத்தட்ட 5,000 பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.
இந்தப் பதிவில் பலர் "புத்திசாலித்தனமான மாடு" என்றும் "ஆச்சரியமான மாடு" என்றும் கருத்திட்டுள்ளனர். அதில் ஒருவர் "இந்தக் காளை சில மனிதர்களை விட சிறந்தது, ஏனெனில் இது தனது வேலையை நன்கு அறிந்துள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார்.