“670 கோடி வங்கி இருப்பு” - இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்

“670 கோடி வங்கி இருப்பு” - இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்
“670 கோடி வங்கி இருப்பு” - இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்
Published on

அரசியல் கட்சிகளின் வங்கியில் அதிக இருப்புத் தொகை வைத்துள்ள கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிதான் எனத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. இதனால் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தங்களின் கணக்குகளை தாக்கல் செய்துவருகின்றன. அந்தவகையில் பகுஜன் சமாஜ் கட்சி தனது வரவு செலவு அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது.

அதில் பகுஜன் சமாஜ் கட்சி தனது வங்கி இருப்புத் தொகையாக 670 கோடி ரூபாய் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அக்கட்சி தனது கையிருப்புத் தொகையாக 95.54 லட்ச ரூபாய் பணத்தை வைத்துள்ளது. இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சிதான் அதிக பணத்தை வங்கியில் இருப்பு தொகையாக வைத்திருக்கிறது. 

கட்சிகள்                                       வங்கி இருப்புத் தொகை

பகுஜன் சமாஜ்                                 ரூ 670 கோடி
சமாஜ்வாதி                                      ரூ. 471 கோடி
காங்கிரஸ்                                        ரூ. 196 கோடி
தெலுங்கு தேசம்                             ரூ. 107 கோடி
பாரதிய ஜனதா                                ரூ. 83 கோடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்            ரூ. 3 கோடி
ஆம் ஆத்மி                                        ரூ. 3 கோடி

அதேபோல பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையை ஏடிஆர் என்ற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. அதில் கடந்த 2016-17ஆம் ஆண்டு 174கோடி ரூபாய் ஆகயிருந்த இக்கட்சியின் வருமானம் 2017-18ல் 52 கோடி ரூபாய் ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. எனினும் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது 24 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. அத்துடன் இந்திய அளவில் அதிக வருமானம் பெற்ற கட்சியாக பாஜக உள்ளது. கடந்த 2017-18ஆம் ஆண்டுகளில் பாஜக ரூ1,027 கோடி ரூபாய் வருமானமாக பெற்றுள்ளது. ஆனால் கடந்த 4 மாநில தேர்தல்களில் பாஜக இந்தத் தொகையினை அதிகம் செலவழித்துள்ளது. ஆகவே அதன் இருப்பு தொகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com