திருமணங்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும் அதனை நடத்தும் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாருக்கு எப்போதுமே பரபரப்பான மனநிலையே இருக்கும். பேச்சுவார்த்தையில் தொடங்கி வார்த்தைப் போராக முற்றும் அளவுக்கு கூட சில திருமண நிகழ்வுகளில் அரங்கேறும்.
ஆனால் பத்திரிகை பிரிண்ட் செய்வதுதான் பொதுவாக நடக்கும் தவறாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் பெயர் விடுபட்டுவிட்டால் சண்டை வரும் என்பதால் மணமகள், மணமகன் பெயர் மட்டும் இருக்கும்படியான பத்திரிகைகளைதான் இப்போதெல்லாம் பல டிசைன்களில் செய்கிறார்கள்.
ஆனால் நான்கு வரிகளே இருக்கும் அந்த பத்திரிகையில் கூட மிகப்பெரிய பிழை இருந்திருக்கிறது. அப்படியான சம்பவம் குறித்துதான் பார்க்கப் போகிறோம். அதன்படி தனது திருமண பத்திரிகையில் ரிசப்ஷன் நடக்கும் இடம் நேரம் அனைத்தையும் குறிப்பிட்டு மேலும் சில விவரங்களுக்கு எங்களுடைய இணையதளத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள URL தான் பேசுபொருளாகியிருக்கிறது.
இது தொடர்பாக டிக்டாக் தளத்தில் வீடியோவாகவே அந்த மணப்பெண் வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய கல்யாண பத்திரிகையில் திருமணம் தொடர்பான விவரங்களை அறிவதற்கான இணையதள முகவரிக்கு பதில் தவறுதலாக பார்ன் படங்கள் இருக்கும் இணையதள முகவரி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த வீடியோவில், “இன்றுதான் என்னுடைய கல்யாண பத்திரிகை எனக்கு கிடைத்தது. அதை கண்டதும் முதலில் ஆர்வமாகதான் இருந்தேன். ஆனால் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. இது பொதுவானதாக இருந்தாலும் நீங்களும் இந்த தவறை செய்யாமல் கவனமாக இருங்கள்” என அறிவுறுத்தவும் செய்திருக்கிறார்.
திருமணம் நடக்கும் இடம் குறித்த விவரங்களை அறிய வேடிக்கையான வெப்சைட் லிங்க்கைதான் கொடுத்திருந்தோம். ஆனால் அது தவறுதலாக பார்ன் ஹப் தளத்தின் முகவரியாக பிரிண்ட் ஆகியிருக்கிறது.
அந்த பத்திரிகையை டிக்டாக்கில் வெளியிட்ட அந்த பெண் தன்னுடைய அம்மா மற்றும் நண்பர்கள், உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.