ஒன்னில்ல.. ரெண்டில்ல.. ₹2700 கோடி -கூலித் தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் மாயமானது எப்படி?

ஒன்னில்ல.. ரெண்டில்ல.. ₹2700 கோடி -கூலித் தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் மாயமானது எப்படி?
ஒன்னில்ல.. ரெண்டில்ல.. ₹2700 கோடி -கூலித் தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் மாயமானது எப்படி?
Published on

தினமும் 600ல் இருந்து 800 ரூபாய்க்கு சம்பாதிக்கும் ஒரு செங்கல் சூளை ஊழியரின் ஜன்தன் வங்கிக் கணக்கில் 2700 கோடி ரூபாய் இருப்பு இருந்திருக்கிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா?

உத்தரப் பிரதேசத்தின் கன்னுஜ் மாவட்டத்தின் சிப்ரமாவ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமல்புர் கிராமத்தை சேர்ந்தவர் பிஹாரி லால். 45 வயதான இவர் செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார்.

தன்னுடைய பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்கில் இருந்து 100 ரூபாயை எடுத்த பிஹாரி லால், அதனையடுத்து வந்த எஸ்.எம்.எஸை பார்த்து திகைத்துப் போயிருக்கிறார். ஏனெனில் அந்த மெசேஜ் மற்றும் பாங்க் ஸ்டேட்மென்ட்டில் இரண்டாயிரத்து 707 கோடியே 85 லட்சத்து 13 ஆயிரத்து 985 ரூபாய் தனது கணக்கில் இருப்பு உள்ளதாக காண்பிக்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக அதை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்று அதிகாரியிடம் காட்டி விசாரித்திருக்கிறார் பிஹாரி லால். அப்போது வங்கி அலுவலரும் ஒன்றுக்கு மூன்று முறை அதனை சரிபார்த்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஸ்டேட்மென்ட்டிலும் 2700 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது.

ஆனால் பிஹாரி லாலின் இந்த சந்தோஷம் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கவில்லை. ஏனெனில், வேறு பகுதியில் உள்ள ஏடிஎமில் மீண்டும் சரி பார்த்தபோது அப்போது அவரது வங்கிக் கணக்கில் வெறும் 26 ரூபாய் மட்டும் இருந்திருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள வங்கியின் மாவட்ட அதிகாரி அபிஷேக் சின்ஹா, “இது டெக்னிக்கல் பிழை காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. பிஹாரிலாலின் கணக்கில் 126 ரூபாய்தான் இருக்கிறது. அவரது வங்கிக் கணக்கு சிறிது நேரத்திற்கு முடக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதில் இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com