புத்தகமானது முதலமைச்சர் பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு

புத்தகமானது முதலமைச்சர் பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு
புத்தகமானது முதலமைச்சர் பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு
Published on

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் முதல்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்தில் பிறந்தவர் முதலமைச்சர் பழனிசாமி. வயது 63. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பிஎஸ்சி வரை படித்துள்ள பழனிசாமி 1972-ம் ஆண்டு தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் அதிமுகவில் பல பொறுப்புகளை வகித்த அவர் எடப்பாடி தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வாகியிருந்தாலும் முதலமைச்சராக பதவியேற்கும் வரை அதிகப்படியான மக்களுக்கு பிரபலமானவராக தெரியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்ததும் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் பழனிசாமி. இதனையடுத்து மக்கள் மத்தியில் பிரபலானவராக உருவெடுத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் முதல்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. யோகா சித்தர் மானோஸ் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். முதலமைச்சரின் சாதனைகள், திட்டங்கள் போன்றவை இப்புத்தகத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com