சுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன? சாதனை என்ன?

சுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன? சாதனை என்ன?
சுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன? சாதனை என்ன?
Published on

கடந்த பதிவில் பாஜகவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த தேர்தல் வாக்குறுதிகளை பார்த்தோம். இப்போது சுகாதாரத்துறையில் பாஜக அளித்த வாக்குறுதிகள் என்ன? அவை எந்தளவுக்கு நிறைவேறின? எனப் பார்ப்போம்.

ஆட்சிக்கு வந்தால் தேசிய மருத்துவக் கொள்கையை புதுப்பிக்க போவதாக 2014 தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்தே (2017) இந்தக் கொள்கையை மீண்டும் புதுப்பித்தது. 

இவர்களின் ஆட்சியில் சுகாதாரத்துறைக்கான செலவு நாட்டின் மொத்த உற்பத்தியிலிருந்து 2.5 சதவிகிதமாக இருக்கும் என வகுக்கப்பட்டது. ஆனால் சென்ற 2018ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி நேஷனல் ஹெல்த் மிஷன் திட்டத்திற்கான  2.1 %நிதியே ஒதுக்கப்பட்டது. மேலும், இந்தத் திட்டம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. ஒரு பகுதி கிராமப்புற மருத்துவம். மற்றொன்று நகரப்புற மருத்துவம். ஆனால் எதிர்பார்த்ததைவிட நகர்ப்புற மக்கள் மருத்துவத்திற்கான நிதி மிகக் குறைந்த அளவே ஒதுக்கப்பட்டது.

அடுத்து ‘ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி மக்கள் சுகாதாரத் திட்டம்’. சுகாதாரத்துறையில் இது பாஜக அரசின் மிக முக்கியமான திட்டம். இந்தத் திட்டத்திலும் புறநோயாளிகள் பாராமரிப்பு சேர்க்கப்படவில்லை. மேலும் இந்தத் திட்டத்திலுள்ள சுகாதார மற்றும் உடல்நல மையத்திற்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது இதற்கான மிகக் குறைந்த நிதியாகும் என பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில், இதில் மக்களுக்கான பல சேவைகள் மற்றும் அத்தியாவசிய மருந்து பொருள்களை வழங்கவேண்டி உள்ளது. இந்தக் குறைந்த நிதியைக் கொண்டு இம்மையத்தை செயல்பட செய்வது கடினம்.

இதனையடுத்து ‘ஸ்வச் பாரத்’ திட்டம்.  இதனை பாஜக அரசு தனது சிறப்பான திட்டமாக முன்வைத்தது. ஆனால் இதன் செயல்பாட்டில் பல்வேறு குறைகள் நிலவி வருகின்றன. வெட்டவெளியை கழிப்பறையாக பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டு அதனை தடுக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் 60% இருந்த இதன் புள்ளிவிவரம் இப்போது ஏறக்குறைய 40% ஆக குறைந்துள்ளது. பலகட்ட முயற்சிக்குப் பின் கிடைத்துள்ள மாற்றம் இது. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, வீட்டில் கழிப்பறை வசதி இருந்தும் இன்றும் பலர் வெட்டவெளியையே கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர் என்கிறது. இதன் அளவு 23% ஆக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆக, இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து பல ஐயங்கள் எழுகின்றன.

பாஜக ஆட்சியில் சுகாதாரத்துறையில் மட்டும் பல குறைகள் உள்ளன. ஆனால் பல முன்னேற்றங்களையும் இந்த அரசு கண்டுள்ளது. அதற்கு சில உதாரணங்கள் உள்ளன. தாய்மார்களின் பிரசவகால இறப்பு (maternal moratlity rate)என்பது 2.7% ஆக குறைந்துள்ளது. மேலும் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு (Infant Mortality Rate)என்பது 34% ஆக குறைந்துள்ளது. 

இதேபோல், காசநோய் பாதிப்பு லட்சத்தில் 204 பேருக்கு மட்டுமே உள்ளது. இது கடந்த 2013ம் ஆண்டின் அளவைவிட மிகக் குறைவு. அத்துடன், மலேரியா பாதிப்பு 30% ஆக குறைந்துள்ளது. ஆனாலும் இந்தத்துறையில் நாடு இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

சரி, கல்வித்துறையில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

(வெயிட் அண்ட் சி..)
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com