டிடிவி-ன் வெற்றி குறித்து ஆளும் அதிமுகவினர் சிந்திக்க வேண்டும்: இல.கணேசன்

டிடிவி-ன் வெற்றி குறித்து ஆளும் அதிமுகவினர் சிந்திக்க வேண்டும்: இல.கணேசன்
டிடிவி-ன் வெற்றி குறித்து ஆளும் அதிமுகவினர் சிந்திக்க வேண்டும்: இல.கணேசன்
Published on

டிடிவி-ன் வெற்றி குறித்து ஆளும் அதிமுகவினர் சிந்திக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்கள் சந்திப்பில், 'ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்றிருப்பது, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு திமுகவின் கை ஓங்கும் என்ற கற்பனை தவறானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்கள், ஜெயலலிதாவின் மீது இன்றும் நம்பிகையும், பக்தியும் வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்டவர்கள் வெற்றி பெற்றிருப்பது குறித்து அதிமுக சிந்திக்க வேண்டும்'.

ஒரு அரசியல் கட்சியாக, இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டது. பாஜக மட்டுமல்ல, மற்ற எந்த கட்சியையும் ஆர்.கே.நகர் மக்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. இத்தேர்தலில் ஜெயலலிதா தான் வெற்றி பெற்றுள்ளார். டிடிவி அணியும், அதிமுகவும் ஒன்றிணைந்து தேர்தலில் நின்றிருந்தால், அமோகமாக வெற்றி பெற்றிருப்பார்கள். இத்தேர்தலின் முடிவு ஆளும் அதிமுகவினருக்கு ஒரு பாடம். இத்தேர்தலில் தனக்குக் கிடைக்காவிட்டாலும், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனநிலை ஒரு அரசியல் கட்சியாக திமுகவுக்கு இருக்கலாம்.

ஜனநாயக ரீதியாக தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளாட்சித் தேர்தலின் போது இதே நிலை இருக்கும் என்று கூற முடியாது, அப்போது, காலம் மாறும், சூழலும் மாறும். பணப்பட்டுவாடா குறித்து தற்போது பேச வேண்டாம், இந்த நேரத்தில் வாக்காளர்களை கொச்சைப்படுத்திப் பேசுவது முறையல்ல, மரபல்ல. வாக்காளர்களின் தீர்ப்பை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இத்தேர்தல் முடிவு பாஜகவுக்கு பின்னடைவு என்றால், திமுகவுக்கும் பின்னடைவு தான். இந்த ஒரு தேர்தலை வைத்து எதையும் முடிவு செய்துவிட முடியாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com