ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே நோட்டா வாக்குகளை விட பாஜக குறைவான வாக்குகளை பெற்று வந்தது. நோட்டா 5-வது இடத்தையும், பாஜக 6-வது இடத்திலும் தொடர்ந்து வந்தது. இறுதியில் கரு.நாகராஜன் 1,368 வாக்குகள் பெற்றார். ஆனால், நோட்டாவிற்கு 2,348 வாக்குகள் கிடைத்தன. அதாவது நோட்டா 1.33 சதவீதம் வாக்குகள் பெற்றது. பாஜக வேட்பாளருக்கு 0.77 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
வாக்குகள் விவரம்:-
தினகரன் (சுயேட்சை) : 89,013
மதுசூதனன் (அதிமுக) : 48,306
மருதுகணேஷ்(திமுக) : 24,581
கலைக்கோட்டுதயம்(நாம் தமிழர்) : 3,802
நோட்டா : 2,348
கரு.நாகராஜன்(பாஜக) : 1,368
வாக்குகள் சதவீத விவரம்:-
தினகரன் (சுயேட்சை) : 50.32
மதுசூதனன் (அதிமுக) : 27.31
மருதுகணேஷ்(திமுக) : 13.90
கலைக்கோட்டுதயம்(நாம் தமிழர்) : 2.15
நோட்டா : 1.33
கரு.நாகராஜன்(பாஜக) : 0.77