“அது இந்திய பாரம்பரியம்; என்ன தவறு உள்ளது”- தனக்கு பாத பூஜை செய்தது குறித்து ‘மெட்ரோ மேன்‘

“அது இந்திய பாரம்பரியம்; என்ன தவறு உள்ளது”- தனக்கு பாத பூஜை செய்தது குறித்து ‘மெட்ரோ மேன்‘
“அது இந்திய பாரம்பரியம்; என்ன தவறு உள்ளது”- தனக்கு பாத பூஜை செய்தது குறித்து ‘மெட்ரோ மேன்‘
Published on

கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுகிறார் ‘மெட்ரோ மேன்’ என சொல்லப்படும் ஸ்ரீதரன். அவருக்கு வாக்காளர்கள் சிலர் பாத பூஜை செய்யும் படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் அது இந்திய பாரம்பரியத்தின் வழக்கம்.  அதை செய்வதில் என்ன தவறு உள்ளது என தெரிவித்துள்ளார் ஸ்ரீதரன். 

அது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு பதில் அளித்துள்ளார் அவர். 

“அது நாம் இந்திய பாரம்பரியத்தின் வழக்கம். அதை செய்வதில் என்ன தவறு உள்ளது. அவர்கள் தங்களது மரியாதையை வெளிப்படுத்துகிறார்கள். அது வழிபாடு அல்ல. 

மேலும் இது பாஜக நம் நாட்டை எந்த திசையில் கொண்டு செல்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு” எனத் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மற்றும் பாஜக என மும்முனை போட்டி  நிலவுகிறது. மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com