பவானிசாகர் பேரூராட்சி: வெறும் 1 ஓட்டு மட்டுமே பெற்று பாஜக வேட்பாளர் படுதோல்வி

பவானிசாகர் பேரூராட்சி: வெறும் 1 ஓட்டு மட்டுமே பெற்று பாஜக வேட்பாளர் படுதோல்வி
பவானிசாகர் பேரூராட்சி: வெறும் 1 ஓட்டு மட்டுமே பெற்று பாஜக வேட்பாளர் படுதோல்வி
Published on

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் 11-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் 1 ஓட்டு மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள பதினைந்து வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 11-வது வார்டில் மொத்தம் உள்ள 200 வாக்குகளில் 162 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக வேட்பாளர் உமாசங்கர் 84 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் செல்வம் 35 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் நாகமையன் 42 வாக்குகளும் பெற்றனர்.

பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நரேந்திரன் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நரேந்திரன் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளதால் பவானிசாகர் பகுதியில் இதுகுறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com