தமிழகத்தில் பாரதிய ஜனதாவால் ஒரு அடி கூட முன்னேற முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, வட மாநில அரசியல் சூழலுடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது என்றுக் கூறினார்.
சென்னையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வடமாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் அவர்களால் ஒரு அடி கூட முன்னேற முடியாது என்று தெரிவித்தார். மேலும், தமிழகம் பெரியார், அண்ணாவின் பூமி என்றும், இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய, பன்முகத்தன்மையை சிதைக்கக் கூடிய பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் வைகோ கூறினார்.