அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இனி பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று பள்ளிக் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் சட்டப்பேரவையில் கல்வித்துறை மீதான விவாதத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “அரசுப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 192 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும்” என்றார். மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இனி பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்படுத்தப்படும் என்றும் இந்த பயோ மெட்ரிக் முறையை நடைமுறைபடுத்த ரூ.9 கோடி செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.