சிவகங்கை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. முதல் கட்ட வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
அதில் கமல்ஹாசன் பெயர் இடம்பெறவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அவர் அறிவித்துவிட்டார். கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் துணை தலைவர் மகேந்திரன் போட்டியிடுகின்றார்.
அதேபோல், சிவகங்கை தொகுதியில் பாடலாசிரியர் சிநேகன் களமிறங்குகிறார். சிவகங்கையில் ஏற்கனவே பாஜக சார்பில் ஹெச்.ராஜா, காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகின்றனர்.
நாமக்கல் - ஆர்.தங்கவேலு,
ஈரோடு - சரவணக்குமார்,
ராமநாதபுரம் - விஜயபாஸ்கர்,
கரூர் - ஹரிஹரன்
கடலூர் - அண்ணாமலை,
தென்காசி - முனீஸ்வரன்,
திருப்பூர் - சந்திரகுமார்,
பெரம்பலூர் - அருள்பிரகாசம்
காஞ்சிபுரம் - எம்.தங்கராஜ்,
தி.மலை - அருள்,
ஆரணி - வி.ஷாஜி,
கள்ளக்குறிச்சி - கணேஷ்,
தென்சென்னை - ரங்கராஜன்,
மதுரை - அழகர்,
தஞ்சை - ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.