வங்கிகள், ஏழை மக்களுக்கு கடன் வழங்க மறுப்பதே அவர்கள் கந்துவட்டிக்கு பணம் வாங்கும் நிலைக்கு காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலபாரதி தெரிவித்துள்ளார்.
கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாலபாரதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வங்கிகள் அனைத்தும், பெரும் முதலாளிகளுக்கு கதவுகளை திறக்கின்றன என்று குற்றம் சாட்டினர். அதே போல் வங்கிகள் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கு கடன் வழங்காததால் தான் அவர்கள் கந்து வட்டியில் பணம் வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ததில், கந்து வட்டி கும்பல்கள் விஸ்வரூபம் எடுத்து வருவதாக செய்தியாளர்களிடம் பேசிய பாலபாரதி தெரிவித்தார்.