பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் பேர்ஸ்டோ 29 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். லிவிங்ஸ்டன் 70 ரன்களை சேர்த்தார்.
20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 209 ரன்களை குவித்த நிலையில் பேட் செய்ய களத்திற்கு வந்த பெங்களூரு அணி வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 35 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய ரபாடா பெங்களூரு அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது. இந்த போட்டியில் 20 ரன்களை எடுத்ததன் மூலம் விராட் கோலி ஐபிஎலில் போட்டிகளில் 6 ஆயிரத்து 500 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.