நோட்டாவை விட குறைவான வாக்குகள் - உ.பி. தேர்தலில் சோபிக்காத ஓவைசி கட்சி

நோட்டாவை விட குறைவான வாக்குகள் - உ.பி. தேர்தலில் சோபிக்காத ஓவைசி கட்சி
நோட்டாவை விட குறைவான வாக்குகள் - உ.பி. தேர்தலில் சோபிக்காத ஓவைசி கட்சி
Published on

உத்தரப் பிரதேச தேர்தலில் இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய அசாதுதீன் ஒவைசி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளை விட, இந்தக் கட்சிக்கு வெகு சொற்ப அளவிலேயே வாக்குகள் கிடைத்துள்ளன.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிரபல கட்சிகள் பெற்ற வாக்குகளைவிட நோட்டாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், 255 தொகுதிகளை கைப்பற்றி பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச தேர்தலில் இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய அசாதுதீன் ஒவைசி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளை விட, இந்தக் கட்சிக்கு வெகு சொற்ப அளவிலேயே வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தமாக வெறும் 0.43 சதவிகித வாக்குகள் மட்டுமே ஓவையின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமீன் கட்சி பெற்றிருக்கிறது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளை குறிவைத்து நூறு தொகுதிகளில் இம்முறை ஒவைசி கட்சி வேட்பாளர்களை களமிறக்கியது. எனினும், அந்தக் கட்சியால் மொத்தமாக 5 ஆயிரம் வாக்குகளை கூட பெற முடியவில்லை. கடந்த முறை 38 தொகுதிகளில் போட்டியிட்ட ஒவைசி கட்சி 37 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'பேட் வுமன்' - நவ்ஜோத்சிங் சித்துவை தோற்கடித்த ஆம் ஆத்மி வேட்பாளர் ஜீவன் ஜோத் யார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com