7 மணி நேர போராட்டம்.. பாறை இடுக்கில் விழுந்த செல்போனை எடுக்க முயன்று தலைகீழாக சிக்கிய பெண் மீட்பு!

கடந்த அக்டோபர் 21ம் தேதி அன்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான மாடில்டா காம்பெல் என்ற பெண் ஒருவர் புகைப்படம் எடுப்பதற்காக தனது குழுவினருடன் ஹண்டர் பள்ளத்தாக்கிற்கு சென்றுள்ளார்.
மாட்டிக்கொண்டவர்
மாட்டிக்கொண்டவர்இன்ஸ்ட்ரா
Published on

நம்மில்சிலருக்கு பலவிதமான ஆசை இருக்கும், உதாரணத்திற்கு அலை சறுக்கு, பனிச்சறுக்கு, மலை ஏறுதல் காட்டுக்குள் பயணித்தல் இப்படி பல விருப்பங்கள் இருக்கலாம். அப்படிதான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஈடுபாடு இருந்து இருந்திருக்கிறது. ஆனால், புகைப்படம் எடுத்த சமயம் அவர் சந்தித்த மோசமான சம்பவம் ஒன்றையும் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை NSW ஆம்புலன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.

கடந்த அக்டோபர் 21ம் தேதி அன்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான மாடில்டா காம்பெல் என்ற பெண் ஒருவர் புகைப்படம் எடுப்பதற்காக தனது குழுவினருடன் ஹண்டர் பள்ளத்தாக்கிற்கு சென்றுள்ளார். அங்கு இவரது குழுவினர் அனைவரும் வெவ்வேறு திசைகளில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க இவர் அப்பகுதியில் இருந்த பாறை ஒன்றின் மேல் ஏறி புகைப்படம் எடுக்கையில் தவறுதலாக இவரது செல்போன் பாறை இடுக்குகளுக்கு இடையில் விழுந்துள்ளது.

அதை எடுப்பதற்காக இவர் குனிந்த பொழுது பாறை வழுக்கி அவரும் தலைக்குப்புற பாறைக்குள் விழுந்துள்ளார். இதில், பாறையின் இடுக்கில் இவரின் இரண்டு கால்களும் மாட்டிக்கொண்டிருக்க , தலைகீழாகத் தொங்கியபடி இருந்துள்ளார். அவரால் வெளியேறவும் முடியவில்லை, மொபைல் போனை எடுக்கவும் இயலவில்லை. இவரின் குரல் கேட்டு , இவருடன் வந்த இவரது நண்பர்கள் அவசரகால உதவி எண்ணை அழைத்து, தோழியில் நிலமை குறித்து கூறியுள்ளனர்.

உடனடியாக NSW ஆம்புலன்ஸ் நிபுணர் மீட்பு படையினர் பீட்டர் வாட்ஸ் என்ற மருத்துவருடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மீட்பு படையினர், பாதுகாப்பாக, மாடில்டா காம்பெலை வெளியே எடுக்க நினைத்தவர்கள் 500 கிலோ எடைக்கொண்ட அந்த பாறையை Tirfor winch உதவியுடன் நகற்றி அப்பெண்ணை மிகவும் கஷ்டப்பட்டு, 7 மணி நேரப் போராட்டங்களுக்குப்பின் சிறுகாயங்களுடன் அவரைக் காப்பாற்றியுள்ளனர். இருப்பினும் அவரது செல்போனை எடுக்க முடியவில்லை.

இது குறித்து பீட்டர் வாட்ஸ் கூறும் பொழுது ”என்னுடைய 10 ஆண்டுகளில் மீட்பு துணை மருத்துவராக இருந்ததில், இது போன்ற ஒரு வேலையை நான் சந்தித்ததில்லை, இது சவாலானது, ஆனால் நம்பமுடியாத அளவிற்கு வெகுமதி அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

NSW ஆம்புலன்ஸ் குழு, நடந்த இந்த சம்பவம் பற்றி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தற்பொழுது இது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com