பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 6-வது முறையாக குஜராத்தில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சூறாவளி பிரச்சாரமே காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், மோடியின் சொந்த ஊரில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. மோடியின் சொந்த ஊரான வட்நகரில் உள்ள உன்ஜா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா படேல் 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரும் எம்.எல்.ஏ.வுமான நாராயணன்பாய் லாலுதாஸ் 62,268 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஆஷா படேல் 81,797 வாக்குகள் பெற்றார். பட்டிதார் சமுதாயத்தினர் அதிகமுள்ள இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் ஆஷா படேலை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் லாலுதாஸ் தோற்கடித்தார் குறிப்பிடத்தக்கது.